sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்!' அரியலுாரில் பழனிசாமி ஆவேசம்

/

'அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்!' அரியலுாரில் பழனிசாமி ஆவேசம்

'அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்!' அரியலுாரில் பழனிசாமி ஆவேசம்

'அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்!' அரியலுாரில் பழனிசாமி ஆவேசம்

1


ADDED : ஏப் 14, 2024 06:24 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 06:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார் : ''அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போன வரலாறு தான் உண்டு. முதலில் எங்களிடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து, அரியலுாரில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாளுக்கு நாள் அ.தி.மு.க.,வுக்கு மக்களிடம் ஆதரவு எழுச்சியாக இருக்கிறது. நாம் வெற்றி பெற இதுவே சான்று. அ.தி.மு.க., 2024க்கு பிறகு இருக்காது என சிலர் பேசுகின்றனர். வேறு எங்கு போகும்?

அ.தி.மு.க., இங்கு தான் இருக்கும். காணாமல் போகுமா? ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என, மக்கள் முடிவு செய்வர். அ.தி.மு.க., பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டு காலம் நிறைவு செய்த கட்சி.

மதுரை அ.தி.மு.க., மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அது கூட சில பேருக்கு புரியாமல் வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி போய்விட்டது. இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க., எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. அதை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். இது தெய்வத்தின் அருள் ஆசியோடு இருக்கும் கட்சி என்பதை மறந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தெய்வசக்தி உள்ள இந்த கட்சியை யார் அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ, உடைக்க நினைத்தாலோ அவர்கள் காற்றோடு கரைந்து போய்விடுவர். இது தான் வரலாறு.

இந்த கட்சியை எத்தனை பேர் எதிர்த்து பார்த்தனர்; இருக்கிற இடம் தெரியாமல் எங்க போனார்கள் என்றே தெரியவில்லை. சில பேர் பணத்தை துாக்கிக் கொண்டு திரிகின்றனர். அது யாரென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

அ.தி.மு.க.,வை நம்பியவர்கள் கெட்டுப் போவதில்லை. அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போன வரலாறை தான் பார்க்கிறோம். அ.தி.மு.க.,விடம் முதலில் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்.

இது உழைப்பை நம்பியிருக்கும் கட்சி. யாருக்கும், எதற்கும் அஞ்சாத தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கும் கட்சி. எத்தனையோ பேரை பார்த்து, சந்தித்து, இடர்பாடுகளை வென்று, இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி.

ஆட்சியில் 30 ஆண்டு காலம் இருந்த கட்சியை பார்த்து மிரட்டி பார்க்கிறீர்கள். இந்த வேலையெல்லாம் இங்கே எடுபடாது. அ.தி.மு.க.,வில், 2.06 கோடி தொண்டர்கள் உள்ளனர்.

எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள். சீண்டினால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தொண்டர்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பர்.

அ.தி.மு.க., இல்லையென்றால் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை கிடைத்திருக்காது. அதுவும் முழுமையாக தரவில்லை. தமிழக மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார். 'இண்டியா' கூட்டணி என்ற பெயரில் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற பார்க்கிறார்.

மக்கள் ஆதரவு அவருக்கு குறைந்துவிட்டது. இந்த ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம் அதிகம். மோடியிடம் ஸ்டாலின் பயப்படுகிறார். நாங்கள் கூட்டணியை விட்டே வெளியில் வந்துவிட்டோம். சொந்தக்காலில் வெல்லக்கூடிய சக்தி படைத்த கட்சி.

கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். மக்கள் எப்போது கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்களோ, அப்போதே தி.மு.க.,வுக்கு தோல்வி தான். அ.தி.மு.க., இந்த தேர்தலில் 40 தொகுதியில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us