ADDED : செப் 03, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காட்டுகாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 18.
இவர், பெரிய அய்யம்பாளையத்திலுள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். மழையில் நனைந்தபடி வேலை செய்த நிலையில், மேலே சென்ற மின்கம்பியில் அவரது தலை உரசியது.
இதில், மின்சாரம் பாய்ந்து மயங்கிய அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.