விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி
விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி
ADDED : ஜூன் 06, 2024 03:07 AM

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் 'நீட்' அகாடமியில் பயிற்சி பெற்ற 35 மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றனர்.
விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் அகாடமியில் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் இலவச 'நீட் கிராஷ்' பயிற்சி 42 நாட்கள் நடந்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, பண்ருட்டி, கடலுார், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், சென்னை பகுதிகளை சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 35 பேர் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ கல்லுாரியில் சேரவுள்ளனர்.
தொடர்ந்து, நீட் ரீப்பிட்டர்ஸ் என்ற ஓராண்டு பயிற்சி இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் துவங்கப்படவுள்ளது.
பயிற்சி அனைத்து நாட்களில் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓராண்டு நடக்கிறது.
அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மூலம் தரம், எளிமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 2 லட்சம் கேள்வி, பதில் தொகுப்புகள் இணையவழி மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுயகற்றல், சுயமதிப்பீடு மூலம் நீட் நுழைவு தேர்வு 2025க்கு தங்களை தயார்படுத்தி சுலபமாக வெல்லலாம்.
இந்த சுயகற்றல் தொகுப்பு யாரிடமும், எந்த நிறுவனமும் வடிவமைக்காத எளிமையான கேள்வி, பதில், விளக்க தொகுப்பாகும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 7708288474 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.