ADDED : ஏப் 18, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வேலுார் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான், 62. இவர், குடியாத்தம் பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை இயல்பாக இருப்பதால், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

