ADDED : ஏப் 03, 2024 07:30 PM
சென்னை:வெயிலுக்கு நடுவே, ஆறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயில் தீவிரமாக உள்ளது. தினமும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிறது. அதேநேரம், கோடை மழையும் ஆங்காங்கே பெய்கிறது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திற்பரப்பில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. பாம்பன், சுருளக்கோடு, 3; சிற்றாறு, 2; தங்கச்சி மடம், தொண்டி, முக்கடல் அணை, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில், அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

