தலைவாசல் :சரக்கு ஆட்டோ டயர் வெடித்து விபத்து இரண்டு பேர் பலி; ஒருவர் படுகாயம்
தலைவாசல் :சரக்கு ஆட்டோ டயர் வெடித்து விபத்து இரண்டு பேர் பலி; ஒருவர் படுகாயம்
ADDED : ஏப் 24, 2024 09:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன், 34. மினி சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், நேற்று, இரவு, 7:40 மணியளவில், சின்னசேலத்தில் இருந்து, சேலம் மாவட்டம், ஆத்துாருக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.
அப்போது, தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, மினி ஆட்டோவின் முன் பக்க டயர் வெடித்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் பஸ்ஸூக்கு நின்றிருந்தவர்கள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், மணிவிழுந்தான் தெற்கு, அருள்குமார், 44, நத்தக்கரை மணி, 60, ஆகியோர் உயிரிழந்தனர். அரசு பஸ் கண்டக்டர் மணிகண்டன், 31, படுகாயமடைந்தார். விபத்து குறித்து, தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

