ADDED : ஜூன் 15, 2024 11:11 PM
சென்னை:தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
l தாம்பரத்தில் இருந்து வரும் 21, 23, 28, 30, ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28ம் தேதிகளில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7:50 மணிக்கு ராமநாதபுரம் செல்லும்
l ராமநாதபுரத்தில் இருந்து வரும் 22, 24, 29, ஜூலை 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை சிவகங்கை வழியாக இயக்கப்படும். சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

