ADDED : மே 24, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி, இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு 4,366 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை; 651 கோடி ரூபாயில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை; 614 கோடி ரூபாயில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; 270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவற்றால் தமிழக வேளாண்மைத் துறை, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.