ADDED : ஏப் 28, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
தமிழகம் முழுதும் ஒரு நாள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. இவ்வகையில், தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட்களாக இருந்து வருகிறது.
தற்போது கடும் வெயில் காரணமாக, 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சராசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்களாக அதிகரித்த நிலையில், கடந்த 18ம் தேதி 44.82 கோடி யூனிட்களாக உயர்ந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவாக 45.17 கோடி யூனிட்களாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது.

