வசந்த் அண்டு கோ நிறுவனத்தில் தமிழ் புத்தாண்டு தள்ளுபடி
வசந்த் அண்டு கோ நிறுவனத்தில் தமிழ் புத்தாண்டு தள்ளுபடி
ADDED : ஏப் 12, 2024 08:53 PM
சென்னை:தமிழ் புத்தாண்டு மற்றும் வசந்த் அண்டு கோ நிறுவனர் வசந்தகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, மூன்று நாட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை, வசந்த் அண்டு கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் பெங்களூரில், வசந்த் அண்டு கோ நிறுவனத்திற்கு, 115 நேரடி கிளைகள் உள்ளன. இவற்றில் தமிழ் புத்தாண்டு மற்றும் நிறுவனர் வசந்த குமார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும், வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களுக்கு, சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
'ஏசி' வாங்கினால் ஸ்டெபிலைசர்; 75 அங்குல எல்.இ.டி., 'டிவி' வாங்கினால் பார் ஸ்பீக்கர்; 65 முதல் 75 இன்ச் வரை எல்.இ.டி., 'டிவி' வாங்கினால் எவர்சில்வர் டின்னர் செட்; 55 முதல் 43 இன்ச் வரை எல்.இ.டி., 'டிவி' வாங்கினால் டின்னர் செட்; 32 இன்ச் எல்.இ.டி., 'டிவி' வாங்கினால் நான்ஸ்டிக் தவா போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
கிரைண்டர், மிக்சி, காஸ் ஸ்டவ், சிம்னி, ஏர்கூலர், வாட்டர் பியூரிபைபர், குக்கர், பேன், டேபிள் பேன் ஆகியவை மிகக் குறைந்த விலையில் தவணை முறை வசதியுடன் கிடைக்கும். 15 லிட்டர் ஏ.பி.எஸ்., பாடி வாட்டர் ஹீட்டர் 5,990 ரூபாய், ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையிலும் கிடைக்கும். 789 ரூபாய் மட்டும் செலுத்தி, பர்னிச்சர்களை தவணை முறையில் எடுத்துச் செல்லலாம் என, வசந்த் அண்டு கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

