ADDED : செப் 16, 2024 06:41 AM

மரக்காணம் : வானுார் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த வாரம் மாணவிக்கு திடீரென உடல் நிலைசரியில்லாமல் போனதால், பெற்றோர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில், மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து கோட்டக்குப்பம் மகளிர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சுத்துக்கேணியை சேர்ந்த பூபாலன் மகன் சாரதி,24; என்பவர் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானது தெரியவந்தது.
அதையடுத்து, வாலிபர் சாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர்.