ADDED : மே 13, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலி கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள நான்கு கடைகளில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் பூட்டை உடைத்து மொபைல் போன், கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து விசாரித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குறிஞ்சிப்பாடி, இலங்கை அகதிகள் முகாமில் வசித்த குணரத்தினம் மகன் ரதுசன், 23, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் குறிஞ்சிப்பாடி, பள்ளிநீரோடை, ரெட்டியார் தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் பார்த்திபன், 23, என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து, பார்த்திபனை இன்ஸ்பெக்டர் சுதாகர், சப் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.