ADDED : மார் 07, 2025 12:21 AM
சென்னை:அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில், தென்காசி கல்வி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அம்மாவட்ட கல்வி அதிகாரியை பாராட்டி, தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் கடிதம் அனுப்பிள்ளார்.
அரசு பள்ளிகளில், கடந்த 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த ஐந்து நாட்களில், தென்காசி கல்வி மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதற்கு காரணமான அம்மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜனை பாராட்டி, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் எழுதியுள்ள கடிதம்:
கல்வி என்பது சொல் அல்ல ஆயுதம். அந்த ஆயுதத்தை அனைவரும் பெற வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.
அரசு பள்ளிகளே பெருமையின் அடையாளம் என்பதை உறுதி செய்யும் வகையில், ஆக்கப்பூர்வமாகவும் விரைவாகவும் செயல்பட்ட தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜனை பாராட்டி மகிழ்வதில் பெருமையடைகிறேன். இதை தொடர வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.