ADDED : பிப் 26, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி,:திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் ௫.௬ கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிழக்காசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கடந்த, 23ம் தேதி, 'ஏர் ஏசியா' விமானம் மூலம் திருச்சி வந்த பயணியரை, நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது, சீமெர், 41, என்பவர் உடலில், திரவ நிலையில் 5.6 கிலோ கஞ்சா கொண்டு வந்திருந்தது தெரிந்தது; மதிப்பு, 5.6 கோடி ரூபாய்.
கேரளாவைச் சேர்ந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.

