ADDED : மார் 28, 2024 01:40 AM
தேனி,:தேனி தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் குடும்ப சொத்து மதிப்பு ரூ.4.98 கோடி.
தங்க தமிழ்செல்வன் கையிருப்பாக ரூ. 4.75 லட்சம் உள்ளது. ஆறு வங்கி கணக்குகளில் ரூ.9.35 லட்சம் உள்ளது. இரு டூவீலர்கள், ஒரு டிராக்டர் உள்ளன. தங்க நகை 200 கிராம் ரூ.8 லட்சம் மதிப்பிலானது.
மொத்த அசையும் சொத்து ரூ.32.50 லட்சம். அசையா சொத்து ரூ.2.42 கோடி. மனைவி பாண்டியம்மாளிடம் கையிருப்புத்தொகை ரூ. 3.50 லட்சம், 7 வங்கி கணக்குளில் ரூ.27.76 லட்சம், ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கிராம் தங்க நகைகள் உள்ளன. அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.54.76 லட்சம் ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ. 1.50 கோடி. மகன் நிஷாந்திடம் ரூ.2.50 லட்சம் கையிருப்பு உள்ளது. நான்கு வங்கி கணக்குகளில் ரூ.2.12 லட்சம் உள்ளது.
ரூ.11 லட்சம் கார், ரூ.80 ஆயிரம் நகைகள் உட்பட ரூ.16.42 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளன. அசையா சொத்துக்கள் ரூ.1.49 லட்சம். குடும்பத்தின் அசையும் சொத்து ரூ.1.03கோடி.
அசையா சொத்து ரூ.3.94 கோடி. வேட்பாளர் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4.98 கோடி. வேட்பாளர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 17 குற்ற வழக்குகள் உள்ளன.