தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ., நிர்வாகி ராஜாவுக்கு எதிரான வழக்கு ரத்து இல்லை

பா.ஜ., நிர்வாகி ராஜாவுக்கு எதிரான வழக்கு ரத்து இல்லை

பா.ஜ., நிர்வாகி ராஜாவுக்கு எதிரான வழக்கு ரத்து இல்லை


ADDED : ஏப் 30, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : அவதுாறாக கருத்து தெரிவித்ததாக, பா.ஜ., நிர்வாகி ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி குறித்து அவதுாறாக, 'டுவிட்' செய்ததாக, பா.ஜ., தேசிய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஹெச்.ராஜாவுக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், ஈரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வழக்கில், ஈரோடு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ராஜா தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 'தேசிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருப்பவர், எதிர்க்கட்சி தலைவர்களை தனிப்பட்ட வகையில் விமர்சிக்கக் கூடாது.

ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us