மொழி பிரச்னையில் முதல்வர் தந்தையாக நடந்து கொள்ளணும்
மொழி பிரச்னையில் முதல்வர் தந்தையாக நடந்து கொள்ளணும்
ADDED : மார் 07, 2025 09:17 PM
புல் அவுட்:
'அப்பா' என தன்னை எல்லோரும் அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். மொழிப் பிரச்னையில், அவர் ஒரு தந்தையாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வியில் முதல்வர் விளையாடக்கூடாது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம், பா.ஜ., தரப்பு கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகிறார். தன்னுடைய பொய்க்காக அவர் பதவியை விட்டு விலக வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி, எல்லா விஷயங்களிலும் பொறுப்பு உணர்ந்து நடக்க வேண்டும். முதல்வர் படம் இருக்கும் இடங்கள் அனைத்திலும், துணை முதல்வர் படமும் உள்ளது. ரேஷன் கடை தோறும் பிரதமர் மோடி தான் இருக்க வேண்டும். ஆனால், வைக்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வந்தவர்களை வாழ்த்த வந்தவர்களாக முதல்வர் கருதுகிறார். அவர்கள் வீழ்த்தவும் வந்திருக்கலாம்.
பொன் ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,