ADDED : ஆக 23, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றுள்ள முருகானந்தம், கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடனிருந்தார். சிறப்பாக பணியாற்ற, முருகானந்தத்திற்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து, நேற்று காலையில் பரவிய தகவல், முதல்வர் பேட்டிக்கு பின் மறைந்தது. மாலையில் கவர்னருடன் நடந்த இந்த சந்திப்பு, மீண்டும் அந்த தகவலுக்கு புத்துயிர் அளித்துள்ளது. இந்த சந்திப்பின் போது புதிய அமைச்சர்கள், துறைகள் மாற்றம் தொடர்பான பட்டியல், கவர்னரிடம் தலைமை செயலர் வழங்கி இருக்கலாம் என்றும், அதன்படி இன்று அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்றும், கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

