சிதைந்த ஈ.வெ.ரா., பொய் ரூபம்; அதனாலேயே சீமானுக்கு சிரமம்
சிதைந்த ஈ.வெ.ரா., பொய் ரூபம்; அதனாலேயே சீமானுக்கு சிரமம்
ADDED : மார் 03, 2025 05:23 AM

தஞ்சாவூர்:
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: தமிழகத்தை கொந்தளிப்பான சூழலில் வைத்திருக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதனாலேயே, மறுசீரமைப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் பதற்றத்தை உருவாக்கி, அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டியுள்ளார். இது, மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் செயல்.
முதல்வருக்கு தமிழ்மொழி பற்று, எள் முனை அளவு இருக்குமேயானால், அவரது குடும்பத்தினர் நடத்தும் சன்சைன் பள்ளியை சமச்சீர் பள்ளியாக மாற்ற வேண்டும். தமிழ்ப்பற்று கொஞ்சம் கூட, முதல்வருக்கு இல்லை. அவருடைய குடும்பத்தினரால் தான் தமிழுக்கு ஆபத்து.
ஈ.வெ.ரா., பொய் ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டார் சீமான். அதை தாங்கிக்கொள்ள முடியாத சிலர், சீமானை சிரமப்படுத்துகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதனாலேயே, சமூக நன்னடத்தை கெட்டுப்போய் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் திராவிடர்கள் தாக்கத்தை, தமிழகத்தில் இருந்து விரட்டாமல், பள்ளிக்கூடத்தில் நடக்கிற பாலியல் வன்கொடுமையை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.