ADDED : மார் 15, 2025 12:41 AM
சென்னை:'தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:தமிழகத்தில் வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல், பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும்.
வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால். வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலுாரில் சதம்:
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில் 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.