அண்ணாமலையின் கேவலமான செயல் தான் கையெழுத்து இயக்கம்
அண்ணாமலையின் கேவலமான செயல் தான் கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 11, 2025 06:08 AM

வட மாநிலங்களில் எத்தனை இடங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை இடங்களில் இரு மொழியை மட்டும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இது தொடர்பான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து கேள்வி எழுப்பினார் தமிழக அமைச்சர் தியாகராஜன். ஆனால், அது குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் அமைதி காக்கிறது பா.ஜ.,வும், மத்திய அரசும்.
பிழைப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அம்மாநிலங்களை சார்ந்தோரின் குழந்தைகள் கூட தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மும்மொழிக் கொள்கையை தமிழகம் விரும்புவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதற்காக, பா.ஜ.,வினர் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். யாரும் கையெழுத்திட ஆர்வம் காட்டவில்லை. அரசியல் பரபரப்புக்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருக்கும் கேவலமான செயல் தான், கையெழுத்து இயக்கம்.
- சிவசங்கர், தமிழக அமைச்சர்