ADDED : மே 26, 2024 02:03 AM

சென்னை:
'மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள, 'ரேமல்' புயல், இன்று
நள்ளிரவு வங்கதேசம் கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர்
தீவுக்கும் இடையே, கரையை கடக்கக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
சென்னை
வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென் தமிழக
மாவட்டங்களில், அனேக இடங்களிலும், வட தமிழக மாவட்டத்தில், ஓரிரு
இடங்களிலும், நேற்று மழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால்
பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது.
கடந்த
24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம்,
மைலாடியில், 10 செ.மீ., மாம்பழத்துறையாறு பகுதியில் 9 செ.மீ., மழை
பதிவானது. வெப்பநிலை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 39.5
டிகிரி செல்சியஸ் பதிவானது.
புயல்
நேற்று
முன்தினம் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு
மண்டலம், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த
தாழ்வு மண்டலமாக, நேற்று காலை 5:30 மணிக்கு வலுப்பெற்றது.
இது
நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, மாலை 'ரேமல்' புயலாக
வலுப்பெற்றது.இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று, நள்ளிரவு
வங்கதேச கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும்
இடையே, கரையை கடக்கக் கூடும். புயல் கரையை கடக்கும் நேரம், தரைக்காற்று
மணிக்கு 110 - 120 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ.,
வேகத்திலும் வீசக்கூடும்.
மழை
தமிழகத்தில்
இன்று முதல் 31ம் தேதி வரை, ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்
காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். அடுத்த ஐந்து தினங்
களுக்கு, அதிகபட்ச
வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், 2 -3
டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். இன்று அனேக இடங்களில்,
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். சென்னையில்
அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்
காணப்படும்.
இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார்
வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்
காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.,
வேகத்திலும் வீசக்கூடும்.
செல்ல வேண்டாம்
வடக்கு
வங்கக்கடல் பகுதிகளில், இன்று மாலை வரை, சூறாவளிக் காற்று மணிக்கு
100 முதல் 110 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ.,
வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதை
ஒட்டிய பகுதிகளில், மணிக்கு 70 - 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே
90 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
விமானநிலையம் மூடல்
ரேமல்
புயல் காரணமாக மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா விமான நிலையம் 21
மணிநேரத்திற்கு மூடப்படுவதாக அறிவித்துள்ளது.இங்கு வந்திறங்கும் விமானங்களை
திருப்பிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.