ADDED : ஜூலை 02, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். .
உளுந்துார்போட்டை அடுத்த எம். குன்னத்துார் டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் அய்யனார்,54; இவர் நேற்று மதியம் கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 2,750 மதிப்புள்ள பீர் பாட்டில்களை திருடு போயிருந்தது.
புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.