sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!'

/

'சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!'

'சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!'

'சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!'

1


ADDED : ஆக 18, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 18, 2024 12:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார சமஸ்கிருத கல்வெட்டாய்வாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள, 'பல்லவா ஸ்கல்ப்சர்ஸ் - கல்ச்சுரல் ஸ்டடி' என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷனில் நேற்று நடந்தது.

நுாலை, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட, சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷனின் தலைவர் நந்திதா கிருஷ்ணா பெற்றுக்கொண்டார்.

சத்தியமூர்த்தி பேசியதாவது:

காஞ்சியில், 275 முதல் 897 வரை ஆண்ட பல்லவர்கள், கலைகளில் மிகச் சிறந்தவர்களாக விளங்கி, குடைவரைக் கோவில்களை அமைத்தனர். அவர்கள் வடித்த சிலைகளில் நளினம் மிளிர்ந்தது. முக்கியமாக, மாமல்லபுரம் சிற்பங்கள், நம் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்களின் கருத்துகளை விளக்குவதாக உள்ளன.

அங்குள்ள சிற்பத் தொகுதி, காலத்தையும் நேரத்தையும் விளக்குவதாக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

கங்காதர மூர்த்தியான சிவன் தன் ஜடா முடியில் கங்கையை வாங்குவதாக அமைந்துள்ள சிற்பத்தில், கங்கையின் ஆக்ரோஷத்தை உணர்த்துவதற்காக, ஏற்கனவே அவர் தலையில் உள்ள சந்திரனை, இன்னொரு கையில் எடுத்து வைத்திருப்பதாக வடிக்கப்பட்டிருக்கும்.

அது மதிய நேரத்தில் நடப்பதை உணர்த்துவதற்காக, இரண்டு கைகளின் இரண்டு விரல்களையும் மடித்து, அதன் இடைவெளியில் சூரியனைப் பார்த்து மந்திரம் ஓதுவது போலவும், அங்குள்ள விலங்குகள் அயர்ந்து படுத்திருப்பது போலவும், அது வசந்த காலத்தில் நிகழ்ந்தது என்பதற்கு, ஒருவர் பலாப்பழத்தை சுமந்து செல்வது போலவும் செதுக்கப்பட்டிருக்கும்.

அதேபோல நிகழ்காட்சிகள் எனும், 'அனிமேஷன்' தொடரை விளக்குவதாக மகிஷாசுரமர்த்தினி, பகீரதன், விஷ்ணு உள்ளிட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும். கலைநயத்துடனும், நுணுக்கமாகவும் படைத்து, பல்லவர்கள் கலைகளை சிறப்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நுாலை பெற்ற நந்திதா கிருஷ்ணா பேசுகையில், “இது சிறப்பான ஆய்வு நுாலாக வெளிவந்துள்ளது. எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்., பவுண்டேஷன் நுாலகத்தில், நம் கலை, கலாசாரம் குறித்த நுால்கள் நிறைய உள்ளன. இவற்றை, வேலைநாட்களில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, ஆய்வாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.

நுாலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

நான் சென்னை பல்கலையில், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் பாலாஜியின் தலைமையில் முனைவர் பட்டத்துக்காக, பல்லவர் சிற்பங்களை ஆய்வு செய்தேன். அப்போது, அவற்றில் அழகியலோடு சமூக ஒருங்கிணைவும் இருந்ததை அறிய முடிந்தது.

ஒவ்வொரு சிற்பமும் அப்போதைய சமூக நிலையை படம்பிடிப்பதாக உள்ளது. ஆண்கள், பெண்களின் உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தொண்டை மண்டலத்தில் உள்ள 65 நுால்களை ஆய்வு செய்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us