sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

/

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது


ADDED : செப் 06, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, செப்., 7 மட்டும் விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால், அந்த நாளில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us