ADDED : செப் 04, 2024 08:40 PM
சென்னை:''காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நடப்பாண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்துள்ளது. காவிரி தண்ணீர் தொடர்பாக கண்காணிக்க ஆணையம் உள்ளது,'' என, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் குரங்கம்மை நோய் பரவல் எதுவும் இல்லை. மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டுதல்கள் வந்துள்ளன. நம் நாட்டிலும், எந்த நோய் பாதிப்பும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சென்னை வந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய தனிப்பட்ட காரணத்துக்காக, நான் இங்கு வந்துள்ளேன்.
காவிரி விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. நடப்பாண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்துள்ளது. காவிரி தண்ணீர் தொடர்பாக கண்காணிக்க காவிரி ஆணையம் உள்ளது. அவர்கள் எவ்வளவு தண்ணீர் கர்நாடகாவிற்கும், தமிழகத்துக்கு தர வேண்டும் என நிர்ணயிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.