ADDED : மார் 23, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்., 19 தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது.
நேற்று வரை, இரண்டு பெண்கள் உட்பட 71 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால், மனுத்தாக்கல் கிடையாது.
வரும் 27 ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே, வரும் 25ம் தேதி முதல் மனுதாக்கல் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

