ADDED : ஆக 10, 2024 01:38 AM
திருச்சி:''திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ எந்த தடையும் இல்லை,'' என, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
திருச்செந்துறை கிராமத்தில் வீடு, மனை மற்றும் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை.
வக்பு வாரியத்தினர், ஏற்கனவே சார் -பதிவாளருக்கு, திருச்செந்துறை கிராமத்தினர் நிலம் பதிவு செய்ய தடை விதித்து அனுப்பியிருந்த சர்க்குலரை திரும்பப் பெற்று கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதனால், திருச்செந்துறை கிராமத்தில் நிலம் தொடர்பான பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு விட்டது.
எனவே, திருச்செந்துறை கிராமத்தில், சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியதில்லை. சுதந்திரமாக பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

