தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று துவக்கம்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று துவக்கம்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : மார் 29, 2024 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உயர்கல்வி சேர்க்கைக்கு ஆலோசனை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று (29ம் தேதி) துவங்குகிறது.

இந்நிகழ்ச்சி, 31ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றுகின்றனர்.

மாலை 6:30 மணி வரை நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் பெறலாம்.

'என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்' எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித் திருவிழாவில், கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறை வல்லுனர்கள் சிறந்த ஆலோசனை வழங்க உள்ளனர்.

மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அட்மிஷன் நடைமுறை


உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் குறித்து விளக்கப்படும்.

கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிபுணர்கள் ஆலோசனை


சிவில் சர்வீசஸ், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷன் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு துறைகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.

மெட்டாவர்ஸ், டேட்டா சயின்ஸ், ஏ.ஆர்., வி.ஆர்., அறிவியல் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் வழிகாட்டல் கிடைக்கும்.

நுழைவுத்தேர்வு வழிமுறை


'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்' போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம், புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்து விளக்கப்படும்.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,- ஐ.ஐ.எஸ்சி.,- ஐ.சி.டி.,- எய்ம்ஸ்,- ஜிப்மர்,- ஐ.எஸ்.ஐ., - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் பெறலாம்.

கல்லுாரி அரங்குகள்


நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக்கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 50க்கும் மேற்பட்ட 'ஸ்டால்'கள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.

இணைந்து வழங்குவோர்


நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பவர்டு பையாக கரம் கோர்த்து வழங்குகின்றன.

கோ-பான்சராக ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி களம் இறங்கியுள்ளது.

மேலும் வழிகாட்டி நிகழ்ச்சியை ருசி பால் நிறுவனம், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியா, அக்குவாகிரீன் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

உடனே பதிவு செய்யுங்கள்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க www.kalvimalar.com என்ற இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்கள். இதேபோல் HI என்று 9150574442 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பி பங்கேற்க பதிவு செய்யலாம்.



இன்றைய அமர்வில் கல்வியாளர்கள்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (29ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரை நடக்கும் அமர்வில், 'எதிர்கால பொறியியல் படிப்புகள்' என்ற தலைப்பில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் பேராசிரியர் பென்ரூபன், விண்வெளி அறிவியல் படிப்புகள் குறித்து இஸ்ரோவை சேர்ந்த ராஜராஜன், சி.ஏ.,- சி.எம்.ஏ.,- ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து ஆடிட்டர் சேகர் ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.மாலை 3:00 முதல் 5:30 வரை நடக்கும் அமர்வில், 'விஞ்ஞானியாக மாறுவது எப்படி' என, டி.ஆர்.டி.ஏ., அதிகாரி டில்லிபாபு, மரைன் கேட்டரிங் ஓட்டல் மேலாண்மை படிப்புகள் குறித்து சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் குறித்து அஸ்வின் விளக்கம் அளிக்கின்றனர்.



அசத்தலான ட்ரோன்கள்

'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் ட்ரோன்கள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் என பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.இயற்கை பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்க கூடியவையாக உள்ளன. ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மிஸ் பண்ணாமா வந்துடுங்க.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us