ADDED : மே 07, 2024 12:02 AM

சென்னை : திருநெல்வேலியில் இருந்து சென்னை வழியாக காசி, கயா உள்பட பல்வேறு இடங்களுக்கு புண்ணிய தீர்த்த யாத்திரை ரயிலை ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க உள்ளது.
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் வாயிலாக, புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா ரயிலை இயக்கி வருகிறது.
பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6ம் தேதி புறப்படுகிறது.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, பிரயாக்ராஜ், கயா மற்றும் அயோத்தி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர உள்ளது.
ஒன்பது நாட்கள் கொண்ட இந்த பயணத்துக்கு ஒருவருக்கு 18,550 ரூபாய் கட்டணம்.
இது குறித்து, மேலும் தகவல் பெற 90031 40739, 82879 32070, 90031 40680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.