ADDED : செப் 16, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மத்திய இணையமைச்சர், முருகன் அளித்த பேட்டி:
தன் தேவைக்காகவும், ஆட்சியில் பங்கு கேட்பதற்காகவும் தான் தி.மு.க.,வை திருமாவளவன் மிரட்டுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி அல்ல. பா.ஜ., மற்றும் பா.ம.க., பற்றி திருமாவளவன் பேசக்கூடாது.
பழனியில் தி.மு.க., முருகன் மாநாடு நடத்த காரணமே, பா.ஜ.,விற்கு முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து பயந்து தான். இது, தி.மு.க.,வின் தேர்தல் அரசியலின் வெளிப்பாடு.
இவ்வாறு கூறினார்.

