sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்த வார கொலை பட்டியல்

/

இந்த வார கொலை பட்டியல்

இந்த வார கொலை பட்டியல்

இந்த வார கொலை பட்டியல்

1


ADDED : ஆக 04, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:02 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

28.7.2024 முதல் 3.8.2024 வரை தமிழகத்தில் நடந்த கொலைகள்

 கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே, பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்த இளைஞர் காங்., நிர்வாகி ஜாக்சன், 38, மனைவி கண் முன் வெட்டிக் கொல்லப்பட்டார்

 கரூர் தெற்கு காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவா, 20. இவர், எட்டு பேர் கொண்ட கும்பலால், கரூர் சிட்கோ பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு, உடலை ஏழு துண்டுகளாக வெட்டி மண்ணில் புதைக்கப்பட்டார்

 சிவகங்கை அருகே, எம்.வேலாங்குளத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி செல்வகுமார், 52. இவர், சாத்தரசன் கோட்டையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்

 கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பத்மநாபன், காரில் வந்த மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்

 சென்னை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விஜயா, 78, நகை, பணத்துக்காக கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்

 கோவை ரத்தினபுரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார், 48, கொடூரமாக வெட்டியும், மர்ம உறுப்பை அறுத்தும் கொல்லப்பட்டார். ஜான்பாண்டியன் ஆதரவாளராக இருந்த இவர், தற்போது கமல் கட்சியில் மாவட்ட பொறுப்பு வகித்து வந்தார்

 திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த மதுரைவீரன், 58, குடும்ப தகராறு காரணமாக, மருமகன் தியாகுவால் கொல்லப்பட்டார்

 நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, 41, தன் வீட்டு வாசலில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.






      Dinamalar
      Follow us