ADDED : செப் 02, 2024 01:45 AM
25.8.24 முதல் 31.8.24 வரை
காஞ்சிபுரம் காலண்டர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில், ம.தி.மு.க., மாவட்ட செயலர் வளையாபதி உள்ளிட்டோரால் கொல்லப்பட்டார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த, ம.தி.மு.க., நகரச்செயலர் மோகன் மகன் அருள் பிரகாஷ், இடப்பிரச்னை காரணமாக கொல்லப்பட்டார்
சென்னை அருகே பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி சிவா, மது போதையில் வேறு ஒரு நபரின் மொபைல் போனை பறிக்க முயன்றதால், ஏரி நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டார்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுாரைச் சேர்ந்த காளியப்பன், கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி லட்சுமியை குடி போதையில் கல்லால் அடித்து கொன்றார்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலர் ரவி, அதே பகுதியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்
சென்னை மயிலாப்பூர் சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம், 75. வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி, ராயப்பேட்டையைச் சேர்ந்த அசார் ஹுசைன், 29 என்பவர், செண்பகத்தை தாக்கிவிட்டு, 5.5 சவரன் நகைகளை கொள்ளையடித்தார். இதில், மூதாட்டி உயிரிழந்தார்
நீலகிரி மாவட்டம் பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இம்ரான், அவரது மனைவி ஆசிகா பர்வீனிடம் 20 லட்சம் ரூபாய் கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளார். கிடைக்காததால், தாய் யாஸ்பின், சகோதரர் முக்தாருடன் இணைந்து, காபியில் விஷம் கலந்து மனைவி ஆசிகா பர்வீனை கொலை செய்து உள்ளார்.