ADDED : ஆக 23, 2024 08:43 PM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் மூவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கதிராமங்கலம் கன்னியாகுடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் 22 இவரும் இவரது நண்பர் நீலமேகம் மகன் ஜெயசீலன் 19 ஆகிய இருவரும் ஸ்ப்ளெண்டர் டூவீலரில் கதிராமங்கலம் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர் .அப்போது மயிலாடுதுறையில் இருந்து டிஸ்கவர் டூவீலரில் ஆளவெளி புருஷோத்தமன் என்பவரும் வந்துள்ளார். தொடர்ந்து ஒருவரை ஒருவர் மாறி சென்ற நிலையில் எதிரே அதிவேகமாக வந்த தனியார் பஸ் இரு டூவீலர்கள் மீதும் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மணிகண்டன் ஜெயசீலன் புருஷோத்தமன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் முகத்தில் உயிரிழந்த மூவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.