ADDED : ஆக 08, 2024 12:40 AM
மதுரை:பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு திருநெல்வேலி -- ஷாலிமார் இடையிலான ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர விரைவு ரயில், எண் - 06087, ஆக., 15 முதல் செப்., 5 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:00 மணிக்கு ஷாலிமார் செல்லும்.
மறுமார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில், எண் - 06088, ஆக., 17 முதல் செப்., 7 வரை சனிக்கிழமைகளில் ஷாலிமாரில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு திங்கள் மதியம் 1:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
இந்த ரயில்களில், 12 ஏ.சி., எகனாமி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளும், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிக்கான பெட்டியும், ஒரு ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டியும் இணைக்கப்படும்.
இந்த ரயில்கள், கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.