ADDED : ஏப் 24, 2024 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை பணிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
'குரூப் - 1 பி, குரூப் - 1சி'யில் அடங்கிய, தமிழக ஹிந்து அறநிலையத்துறையில், உதவி கமிஷனர் பதவியில், 21 காலியிடங்கள்; பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட கல்வி அதிகாரி என்ற டி.இ.ஓ., பதவியில், எட்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முதல்நிலை தகுதி தேர்வு, ஜூலை, 12ல் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது; மே, 22க்குள் பதிவுகளை மேற்கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்பட உள்ளது. விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

