ADDED : ஜூன் 21, 2024 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக சட்டசபையில் இன்று காலை, நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர்கள் துரைமுருகன், கணேசன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
மாலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, கீதா ஜீவன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்பு களை வெளியிடுவர்.

