ADDED : ஜூன் 22, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் இன்று காலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
மாலையில் வேளாண் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.

