ADDED : ஜூன் 26, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் இன்று காலை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டசபை, கவர்னர் மற்றும் அமைச்சரவை, எரிசக்தி துறை, நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர். முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள, திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை அறிவிப்புகளும் வெளியிடப்படும்.
lமாலையில், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.
l அமைச்சர்கள் ராமச்சந்திரன், மூர்த்தி, சேகர்பாபு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

