கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
ADDED : மே 19, 2024 02:11 AM
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால், அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசியில், குற்றால அருவியில் திடீர் வெள்ளம் கொட்டியதில், அருவியில் குளித்துக் கொண்டிருந்த 16 வயது சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நேற்று மட்டும் அமலான இந்த உத்தரவு, இன்று, நாளை அமலில் இருக்கும். வனத்துறையினரின் தடையால், கொல்லிமலைக்கு நேற்று வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

