ADDED : மே 14, 2024 11:18 PM
சென்னை:தமிழகத்தின் இரண்டு டி.ஐ.ஜி.,க்கள், மத்திய அரசின் அயல் பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என்ற இந்திய குடிமை பணி, இந்திய காவல் பணி போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், மத்திய, மாநில அரசு என, இருவித பணிகளிலும், அரசின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பணியமர்த்தப்படுவர்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து, மத்திய அரசு பணிக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில், மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யா பாரதி மற்றும் காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி., பொன்னி ஆகியோரை, மத்திய அரசு பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பணியமர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உத்தரவுக்கு, தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, டி.ஐ.ஜி., ரம்யா பாரதி, மத்திய சிவில் விமான பாதுகாப்பு பணியக பிரிவிற்கும்; டி.ஐ.ஜி., பொன்னி, மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

