sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்'

/

'மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்'

'மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்'

'மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்'


ADDED : ஜூன் 26, 2024 03:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : “அரசு நிலங்களில் மரங்களை வெட்டுதற்கு விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் - 2024 இயற்றப்படும்,” என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:

l ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

l கோவையில் உள்ள வன உயர் பயிற்சியக மரபியல் பிரிவில், விதை நிலைதன்மையை பாதுகாக்கவும், ஆண்டு முழுதும் நடவு செய்வதற்கு விதைகளை வழங்கவும், 'கிரயோஜெனிக்' குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு பெட்டகம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்

l அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை வெட்டுதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் --- 2024 இயற்றப்படும்

l வனங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காடுகளை மீட்டெடுப்பதில் புதிய பரிமாணங்கள் அடைவதற்கும், புதிய மாநில வனக்கொள்கை வெளியிடப்படும்

l சமீபத்தில் மறைந்த நாட்டின் தலைசிறந்த வன பாதுகாப்பு ஆர்வலர் ஏ.ஜே.டி.ஜான்சிங் பெயரில், 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வன உயிரின பாதுகாப்பு விருது வழங்கப்படும்

l நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வான் பூங்கா அமைக்கப்படும்

l கூடலுார் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 'ஆர்க்கிட்டேரியம்' எனும் மரங்களில் தொற்றி வளரும் அழகான பூக்கும் தாவரங்கள், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

l தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள 40 மலையேற்ற வழித்தடங்களின் வரைப்படங்கள் உருவாக்கப்படுவதுடன், தேவையான அடிப்படை வசதிகளும், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us