sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.என்.ஜி., பஸ்கள் சோதனை ஓட்டம்

/

சி.என்.ஜி., பஸ்கள் சோதனை ஓட்டம்

சி.என்.ஜி., பஸ்கள் சோதனை ஓட்டம்

சி.என்.ஜி., பஸ்கள் சோதனை ஓட்டம்


ADDED : ஜூன் 14, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில், சி.என்.ஜி., - எல்.என்.ஜி., பஸ்களின் சோதனை ஓட்டத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த செலவில், 27 சதவீதம் டீசலுக்காக செலவிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனப்படும், திரவ இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க அரசு முடிவு செய்தது.

ஏழு அரசு போக்குவரத்து கழகங்களில், தலா இரண்டு பஸ்களில் சி.என்.ஜி.,யும், மாநகர் மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில், தலா இரண்டு பஸ்களில் எல்.என்.ஜி., எரிபொருளும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக மாநகர், விழுப்புரம் போக்குவரத்து கழகங்களின் நான்கு எல்.என்.ஜி., பஸ்கள் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், இரண்டு சி.என்.ஜி., பஸ்கள் என, ஆறு பஸ்களை இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த பஸ்களின் சோதனை ஓட்டத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னையில் நேற்று பல்லவன் இல்லத்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவை, மேற்கு சைதாப்பேட்டை - ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் -- பூந்தமல்லி, ராமநாதபுரம் -- பெரியபட்டினம், ராமநாதபுரம் - சாயல்குடிக்கு இயக்கப்படுகின்றன.

இதில், அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:

சி.என்.ஜி., - எல்.என்.ஜி., பஸ்கள் இயக்குவதால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, செலவினத்தைக் குறைக்க முடியும். வாரிசுதாரர்களின் நியமனம் அரசு விதிப்படி மேற்கொள்ளப்படுகிறது. 20,000 பஸ்களில், ஏதோ ஒரு இடத்தில் சேதம் ஏற்படும் போது, அதை பெரிதுபடுத்த வேண்டாம். இது இரவு பகலாக பணியாற்றுவோரை அவமதிப்பது போல உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் பெரியளவில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக, 1,000 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

நடப்பாண்டு இறுதிக்குள், 7,200 பஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது பழைய பஸ்கள் மாற்றப்படும்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நவீன தொழில்நுட்ப அடிப்படையில் தான், பழைய பஸ்களின் ஆயுட்காலத்தை நீட்டித்தோம். இதன் காரணமாக பஸ்கள் பழுதாவதில்லை. காலாவதியான பஸ்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.

ஓய்வூதியர்களின் கோரிக்கை விவகாரத்தில், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். விரைவு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பிற போக்குவரத்து கழகங்களில், மூன்று மாதங்களுக்குள் காலிப்பணியிடம் நிரப்பப்படும். மழைக் காலத்திற்கு முன்பாக பஸ்கள் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, தொ.மு.ச., பேரவை பொதுச்செயலர் சண்முகம் எம்.பி., அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், மோகன், ராஜ்மோகன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- பிரதீப்குமார்,

சென்னை ஆட்டோ காஸ் நிர்வாகி.

17 சதவீதம் கூடுதல் மைலேஜ் கிடைக்கும்!


'டீசல் பஸ்சை சி.என்.ஜி., அல்லது எல்.என்.ஜி., பஸ்சாக மாற்ற, 11 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. டீசல் பஸ்சுக்கு இணையாக இந்த பஸ்களும் ஓடும். 17 சதவீதம் கூடுதல் மைலேஜ் கிடைக்கும். எரிபொருள் செலவு 15 சதவீதம் குறையும். ஸ்ரீபெரும்புதுாரில் மட்டுமே, தற்போது இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி இருக்கிறது.
இந்த பஸ்கள் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்போது, முக்கிய பணிமனைகளிலும் இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, பணியாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை முன்வைத்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.








      Dinamalar
      Follow us