ஊற்வச ஆச்சாரியாருக்கு மரியாதை:வீடு வரை ஊர்வலம் அழைத்து சென்ற தீட்சிதர்கள்
ஊற்வச ஆச்சாரியாருக்கு மரியாதை:வீடு வரை ஊர்வலம் அழைத்து சென்ற தீட்சிதர்கள்
ADDED : ஜூலை 12, 2024 09:05 PM

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனிதிருமஞ்சன தரிசன விழா முடிவுற்றதை தொடர்ந்து, உற்சவ ஆச்சாரியாருக்கு மரியாதை செய்து ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து சென்று ஆசி பெற்றனர்.
சபரிமலையில் மேல்சாந்தியை சேர்ந்தெடுக்கும், திருவோலை சீட்டு, முறையில், சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் பின்பற்றப்பகிறது. அந்த வகையில், ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனிதிருமஞ்சனம் விழாவிற்காக உற்சவ ஆச்சாரியார், திருவோலை சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த ஆண்டு ஆனிதிருமஞ்சன தரிசன விழாவின் உற்சவ ஆச்சாரியாராக கிருஷ்ணசாமி தீட்சிதர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடியேற்றம் துவங்கி தரிசனம் வரை 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் இவரே செய்து வந்தார்.
இந்நிலையில், 10 நாள் திருவிழாவை சிறப்பாக செய்திருந்த, உற்சவ ஆச்சாரியார் உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கு, கோவில் பொது தீட்சிசிதர்கள் சார்பில், நடராஜர் சன்னிதானம் முன்பு, மரியாதை செய்து, அங்கிருந்து, புறப்பட்டு, கோவில் யானை 'சிவகாமி' முன்னே செல்ல தீட்சிதர்கள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், வீடு வரை அவரை ஊர்வலமாக அழைத்து ஆசி பெற்றனர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

