ADDED : ஜூன் 20, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ.,வில் இருந்து திருச்சி எஸ்.சூர்யா நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ., இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலர் திருச்சி எஸ்.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே போல், மாநில தலைமை பற்றி ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் அவதுாறை பரப்பி வருவதால், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன், ஓராண்டுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, தமிழக பா.ஜ., அறிவித்துள்ளது.