ADDED : மார் 23, 2024 06:26 AM

திருச்சி லோக்சபா தொகுதி உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு காலம் இருந்த
திருநாவுக்கரசருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலை
ஏற்பட்டிருக்கிறது.
'காங்கிரஸ் மாநிலத்தலைவராக இருந்த தமிழக மூத்த
அரசியல் தலைவர்களில் ஒருவரான எனக்கே இந்த நிலைமையா? பல முறை அறந்தாங்கி
சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தொடர்ச்சியாக இருந்ததோடு,
எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக இருந்திருக்கிறேன்.
'தலைமுறை
கடந்து அரசியல் தலைவராக இருக்கும் எனக்கு, திருச்சி 'சீட்' மறுத்ததில்
திட்டமிட்ட சதி இருக்கிறது' என வெளிப்படையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்
திருநாவுக்கரசர்.
அவர் திருச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல்
செய்ய வேண்டும் என்பதற்காக, காங்கிரசில் இருப்பவர்களே திட்டமிட்டு,
தி.மு.க., மற்றும் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியான
ம.தி.மு.க.,வுடன் பேசி, தொகுதியை காங்கிரசுக்கே இல்லாமல் செய்து விட்டதாக
அரசியல் வட்டாரங்களில்பரபரப்பாக பேசுகின்றனர்.
மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

