தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாணவிக்கு தொல்லை த.வெ.க., நிர்வாகி கைது

மாணவிக்கு தொல்லை த.வெ.க., நிர்வாகி கைது

மாணவிக்கு தொல்லை த.வெ.க., நிர்வாகி கைது


ADDED : மார் 02, 2025 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் : மகள் உறவு முறை கொண்ட மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45; த.வெ.க., கடத்துார் நகர பொறுப்பாளர். இவருக்கு மகள் உறவு முறை கொண்ட, 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

பிப்., 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு, சுதாகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

மாணவி புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, சுதாகரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us