ADDED : மார் 07, 2025 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:த.வெ.க., பொதுக்குழு, இம்மாத இறுதியில் சென்னையில் கூடுகிறது.
த.வெ.க., சார்பில் தமிழகம் முழுதும், 70 ஆயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் கலந்துரையாடும் மாநாட்டை, அக்கட்சி தலைவர் விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு முன், கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தை, இம்மாதம் இறுதியில் சென்னையில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது.
விஜய் சுற்றுப்பயணம், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி உள்ளிட்ட தீர்மானங்கள், அதில் நிறைவேற்றப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.