குறுவை சாகுபடி தொகுப்பு அரசியல் ஏமாற்று நாடகம்: என்கிறார் இ.பி.எஸ்.,
குறுவை சாகுபடி தொகுப்பு அரசியல் ஏமாற்று நாடகம்: என்கிறார் இ.பி.எஸ்.,
ADDED : ஜூன் 15, 2024 11:33 AM

சென்னை: 'தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடித் தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் தண்ணீரை பெற, தி.மு.க., அரசு இதுவரை முயற்சி செய்யவில்லை. தி.மு.க., அரசு கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்யவில்லை. பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.35 ஆயிரம் கிடைக்காமல் டெல்டா விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
துயரம்
தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடித் தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம். டெல்டா விவசாயிகளின் தேவை என்ன என்பதை கண்டு கொள்ளாமல் அவசர கதியில் குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது. அவர்களின் துயரத்தை போக்கவும் முடியாது. டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.