எஸ்.எஸ்.,கோட்டை மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இருவர் பலி
எஸ்.எஸ்.,கோட்டை மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இருவர் பலி
ADDED : ஜூன் 10, 2024 12:41 AM
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.,கோட்டை படைத்தலைவியம்மன், கருக்குமடை ஐயனார் கோயில் புரவி எடுப்பையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர் உட்பட இருவர் பலியாகினர்.
எஸ்.எஸ்., கோட்டை படைத்தலைவியம்மன், கருக்குமடை ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி அரசு அனுமதியின்றி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள், மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின் படிப்படியாக அனைத்துகாளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரரான மதுரை சேக்கிபட்டி மணி மகன் சரண் 19, சிவகங்கை தேத்திபட்டி கிச்சன் 60, ஆகியோர் படுகாயமுற்று பலியா கினர். காளைகள் முட்டியதில் மேலும் 13 பேர் காயமுற்றனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விழா கமிட்டியை சேர்ந்த 5 பேர் மீது எஸ்.எஸ்.,கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.

